News November 19, 2025
தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.
Similar News
News January 19, 2026
தஞ்சாவூர்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

தஞ்சாவூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன்<
News January 19, 2026
தஞ்சாவூர்: கம்பெனி CALL-களை தடுக்க சூப்பர் வழி!

தஞ்சாவூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க.!
News January 19, 2026
தஞ்சாவூர்: அமைச்சர் , எம்எல்ஏ விடுதலை – அதிரடி தீர்ப்பு

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


