News November 19, 2025
தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.
Similar News
News January 18, 2026
தஞ்சாவூர்: வாய்க்காலில் பைக் பாய்ந்து ஒருவர் பலி

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபு. திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று கோபு தனது மகள் ஹர்ஷவர்த்தினியுடன் அரியலூரில் வசிக்கும் தனது அக்காவுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்து விட்டு வீடு திரும்பிய போது, கபிஸ்தலம் வாய்க்காலில் பைக் பாய்ந்ததில் கோபு உயிரிழந்தார்.
News January 18, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.17) இரவு 10 முதல் இன்று (ஜன. 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!