News August 24, 2025
தஞ்சை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. 1 குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 25, 2026
தஞ்சை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
தஞ்சை: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜன.28ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அதே தினம் பிற்பகல் 3 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News January 25, 2026
தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!


