News October 12, 2025
தஞ்சை: திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அதிமுகவைச் சேர்ந்த 31-வது வார்டு கவுன்சிலர் குமணன், 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28-வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் திமுக நகர செயலாளர் எஸ்.ஆர்.என் செந்தில்குமார் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர், ஒன்றிய செயலாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News December 13, 2025
தஞ்சாவூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
பெண் குழந்தைகளுக்கு விருது – ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய பெண் குழந்தைகளை தினத்தை முன்னிட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இதேபோல் 2026-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் விருதை பெறுவதற்கு தகுதியுள்ள குழந்தைகள் http://awards.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
தஞ்சை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

தஞ்சை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!


