News November 25, 2025
தஞ்சை: கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டு செல்வம் என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்த கிருஷ்ணன், நாகராஜன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று (நவ.24) தீர்ப்பளித்தார்.
Similar News
News January 25, 2026
தஞ்சை: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜன.28ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அதே தினம் பிற்பகல் 3 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News January 25, 2026
தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News January 25, 2026
தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!

தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி வருகிற 28ம் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


