News November 14, 2025
தஞ்சை: குட்கா விற்ற 2 பேர் அதிரடி கைது

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனோஜிப்பட்டி, உப்பரிகை அருகே மளிகை கடையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையிலான காவலர்கள், மளிகை கடையில் சோதனை செய்து இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த 112 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 9, 2025
தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

ரெட்டிபாளையம் கௌரி நகரில் வசித்து வரும் குணசேகரன் என்பவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, வெள்ளி விளக்கு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 9, 2025
தஞ்சை: ரயில்வே வேலை.. கடைசி வாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 9, 2025
தஞ்சாவூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

தஞ்சாவூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


