News October 6, 2025

தஞ்சை: கதண்டு கடித்து 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

image

பேராவூரணி கொல்லைக்காடு பகுதியில் சனிக்கிழமை இரவு மக்கள் குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அப்போது, அடுப்பிலிருந்து கிளம்பிய புகை ஆலமரத்தை நோக்கி செல்ல, மரத்தில் இருந்த மலைத்தேனீ மற்றும் கதண்டுகள் அங்கிருந்த மக்களைக் கடித்தன. இதனால், 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்றும் (நவ.16), நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 16, 2025

தஞ்சை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

தஞ்சையில் கொள்முதல் நிலையங்கள் இன்று செயல்படும்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில், செயல்பாட்டிலுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை செயல்படும். (நவ.16) முதல் (நவ.20) வரை பலத்த மழை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி தஞ்சாவூரில் 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 9 தொகுப்பு கிடங்குகள், 14 சேமிப்பு கிடங்குகள் ஆகியவை இன்று (நவ.16) செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!