News August 22, 2024

தஞ்சை ஆயுதப்படை பெண் காவலர் சாலை விபத்தில் பலி

image

பேராவூரணி அடுத்த ரெட்டவயல் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் இன்று அதிகாலை வீடு திரும்பிய தஞ்சை ஆயுதப்படை பெண் காவலர் சுபப்ரியா மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Similar News

News November 7, 2025

தஞ்சை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

News November 7, 2025

தஞ்சை: வாக்காளர் சிறப்பு தீவிர‌ திருத்த ஆய்வு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான‌ ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர‌ திருத்தம் கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 7, 2025

தஞ்சை: திருமணத்திற்கு தங்கம் வேண்டுமா?

image

தஞ்சை மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!