News March 23, 2024
தஞ்சை அருகே தேரோட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ பெரிய நாயகி சமேத நாகேஸ்வரன் திருக்கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருள சிறப்பு ஆராதனை நடைபெற்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
Similar News
News November 13, 2025
வேலைவாய்ப்பு: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. மிதிவண்டிகள் கோர்க்கும் பணிக்கு 10 ஆம் வகுப்பு, ஐடிஐ படித்த ஆண்கள் மற்றும் ஏற்கனவே இப்பணி செய்தவர்கள் 15.11.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
தஞ்சை மாவட்ட போலீசார் அதிரடி; 6 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர், பட்டுக்கோட்டை, நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 753 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப் பொருட்களை கடத்தி வைத்திருந்த திருநாவுக்கரசு, மகேந்திரன், கார்த்திக், அப்துல்லா, சுரேஷ், காமராஜ் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு ஈடுபட்ட வாகனங்களையும் பறிமுதல்.
News November 13, 2025
தஞ்சை: ஏர்போர்ட்டில் பணிபுரிய வாய்ப்பு – கலெக்டர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA – CANADA) பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


