News October 18, 2025
தஞ்சை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் உள்ள நாராயணசாமி சிலை அருகே கடந்த 16-ந்தேதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் யார் இவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதை தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News November 11, 2025
தஞ்சை: கிரிக்கெட் வீரராக மாற வாய்ப்பு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிக்கு தஞ்சை மாவட்ட வீரர்கள் தேர்வு வரும் நவ.16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தஞ்சை பரிசுத்தம் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 1/9/1985-க்கு பிறகு பிறந்தவர்களும், 31/08/2012-க்கு முன்பு பிறந்தவர்கள் பங்கேற்கலாம் என தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
தஞ்சை மக்களே, முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், <


