News September 4, 2025

தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

image

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, தஞ்சையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் தஞ்சை மாவட்ட ஆட்சியரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

தஞ்சாவூரில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது

image

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னாவின் பைக் செவ்வாய்க்கிழமை திருட்டுப் போனது. இதேபோல் மானோஜிப்பட்டி ராதிகாவின் பைக் அக்டோபர் 30ம் தேதி அன்று ஈஸ்வரி நகரில் திருடப்பட்டது. இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில், அம்மாகுளத்தைச் சேர்ந்த கிசாந்த் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News November 12, 2025

JUST IN தஞ்சை: 2 பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து

image

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த கோவிந்தபுரத்தில் இன்று காலை மயிலாடுதுறை சாலையில் சென்று கொண்டிருந்த இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியது. அப்பகுதியில் இதுபோல தொடர் விபத்துகள் நடைபெறுவதால், வேகத்தடை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 12, 2025

தஞ்சை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தஞ்சை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!