News August 18, 2025

தஞ்சையில் அடையாள தெரியாத ஆண் சடலம்

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இராஜாமடம் கிளைவாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஒரத்தநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எவ்வாறு இறந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

தஞ்சாவூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

image

தஞ்சையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 10, 2025

தஞ்சாவூரில் நாளை மின்தடை அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் துணை மின் நிலையத்தில் நாளை(டிச.11) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அம்மிநிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் தாமரன்கோட்டை மதுக்கூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

தஞ்சாவூர்: போலீஸ் என கூறி ரூ.44 லட்சம் கொள்ளை

image

மன்னார்குடியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கார்த்திக்கின் என்பவரின் சகோதரர் அர்ஜுன், பணியாளர் பிரதீபன் ஆகியோர் தஞ்சையில் இருந்து ரூ.44 லட்சத்தை பெற்றுக்கொண்டு, ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, வாண்டையார் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர் ஒருவர் தன்னை குற்றப்பிரிவு காவலர் என கூறி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!