News September 3, 2025
தஞ்சாவூர்: டிகிரி போதும், ரூ.27 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

தஞ்சை இளைஞர்களே மத்திய அரசின் தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள 248 காலிப்பணியிடங்களுக்கு நிரப்பப்படவுள்ளது. வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் கணினி அறிவியல்படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. மாத சம்பளமாக ரூ.27,000 முதல் வழங்கப்படும். நீங்களும் இந்த பணிகளுக்கு எளிதில் விண்ணப்பிக்க 01.10.2025 தேதிக்குள் இங்கே <
Similar News
News December 7, 2025
தஞ்சை: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிக்காடு பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் டான்போஸ்கோ. இவர் திருச்சி சமயபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குளிப்பதற்காக ஹீட்டர் மூலம் சுடுதண்ணீர் வைத்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி டான்போஸ்கோ பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 7, 2025
தஞ்சை: முன்னாள் எம்பி வீட்டில் கொள்ளை – 4 பேர் கைது

திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஒரே குடும்பத்தை சேர்ந்த சாதிக் பாஷா, மொய்தீன், ஆயிஷா பர்வீன், பாத்திமா ரசூல் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஷாஜகான் என்பவரை தேடி வருகின்றனர்.
News December 7, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.6) இரவு 10 மணி முதல் இன்று (டிச.7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


