News October 6, 2025
தஞ்சாவூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News November 16, 2025
தஞ்சை: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள், <
News November 16, 2025
தஞ்சை அருகே விபசாரம்: 3 பேர் கைது

ஒரத்தநாடு அருகே வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு ஆண், பெண் மற்றும் புரோக்கராக செயல்பட்ட வீட்டின் பெண் உரிமையாளர் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News November 16, 2025
தஞ்சை: கஞ்சா விற்ற இளைஞர் கைது

தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த டூவீலர் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்திய லால்குடியை சேர்ந்த ரெனால்டு என்பவரையும் கைது செய்தனர்.


