News October 18, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 7, 2025
வல்லம் : திருடு போன செல்போன்கள் மீட்பு

வல்லம் காவல் நிலையத்தில் செல்போன்கள் திருட்டு போனது மற்றும் காணாமல் போன வழக்குகள் தீவிரமாக ஆராயப்பட்டு 15 செல்போன்களை காவல்துறை மீட்டனர். இதனை உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று ( நவ 06 ) வல்லம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதையடுத்து செல்போன்களை பெற்றுக் கொண்டவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
News November 7, 2025
தஞ்சை: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சினம்பூண்டி சாளுவன்பேட்டைத் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் மனைவி ஜெகதாம்பாள். இவர் வீட்டின் முன்பு தன் பேரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அதே தெருவை சேர்ந்த சின்னராசு மகன் ஆனந்த் என்பவர் குடிபோதையில் ஜெகதாம்பாளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெகதாம்பாள் அளித்த புகாரின் பேரில் ஆனந்தை போலீசார் கைது செய்தார்.
News November 7, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.6) இரவு 10 மணி முதல் இன்று (நவ.7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


