News November 25, 2025

தங்க நகை திருட்டு.. இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

image

திருடு போன நகையை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது, நகை திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் வழக்கை முடித்து வைத்தால், புகார்தாரருக்கு 12 வாரங்களுக்குள் அந்த நகையின் மதிப்பில் 30% தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

Similar News

News January 21, 2026

யாரும் எங்களை அணுகவில்லை: பிரேமலதா

image

கூட்டணிக்காக இந்த நிமிடம் வரை யாரும் தங்களை அணுகவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் கூட்டணி குறித்து தாங்கள் முடிவெடுக்கவில்லை எனவும், அதுகுறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். அத்துடன், தற்போது பியூஷ் கோயல் எதற்கு தமிழகம் வந்திருக்கிறார் என்பது கூட தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

BREAKING: விஜய் கட்சிக்கு பொதுச் சின்னம்?

image

தவெகவின் சின்னம் வெளியாகும்போது உலகமே அதனை உற்றுநோக்கும் என்றும் அக்கட்சியினர் கூறிவந்தனர். இந்நிலையில், தவெகவுக்கு பொதுச் சின்னம் அளிக்க ECI பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தேர்தலில் போட்டியிடாமல் அங்கீகரிக்கப்படாத கட்சியாக தவெக உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். விசில், மோதிரம் என ஏற்கெனவே பேச்சு எழுந்துள்ள நிலையில், எந்த சின்னம் கொடுத்தால் சரியாக இருக்கும்?

News January 21, 2026

தற்கொலைக்கு சமம் என்று சொல்லிவிட்டு கூட்டணியா?

image

அதிமுக-பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதாக<<18913412>> TTV தினகரன்<<>> அறிவித்துவிட்டார். இந்நிலையில் அதிமுக குறித்த அவரது கடந்த ஒரு மாதகால பேச்சுகள் தற்போது வைரலாகி வருகின்றன. EPS -உடன் கூட்டணி அமைத்தால் அது தற்கொலைக்கு சமம் என்றும், EPS என்ற தீயசக்தி வரும் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்றும் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று அதே அதிமுகவுடன் TTV கூட்டணி வைத்துள்ளாரே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

error: Content is protected !!