News April 2, 2025
தங்க சங்கிலி பறித்தவர்கள் கைது

கொள்ளிடம் மணியிருப்பு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கலியமூர்த்தி என்பவரின் தங்க சங்கிலியை நேற்று முன்தினம் இளைஞர்கள் வழிமறித்து பறித்து சென்றனர். புகாரின்பேரில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அளக்குடியை சேர்ந்த தமிழ்மாறன், பார்த்திபன், கண்ணதாசன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க சங்கிலியை மீட்டனர்.
Similar News
News January 13, 2026
மயிலாடுதுறை: வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 டூவீலர்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 58 வாகனங்கள் வரும் ஜன.21-ம் தேதி மயிலாடுதுறை டிஎஸ்பி முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் 21.01.2026 அன்று காலை 6 மணி முதல் 9 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
மயிலாடுதுறை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் வரும் ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்) அன்று முழுவதுமாக மூட வேண்டும் என்றும், இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
மயிலாடுதுறை: டாஸ்மாக் கடைகள் இயங்காது- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் வருகிற 16.01.26 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.26 குடியரசு தினம் அன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. தவறும் பட்சத்தில் கடைகளின் மேற்பார்வையாளர்கள் உரிமதாரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்


