News November 18, 2024

தங்க கவசத்தில் காட்சி தந்த  ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத திங்கள்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

Similar News

News December 10, 2025

மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கில் ஆட்சியர் ஆய்வு!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், இன்று ஆய்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டு வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தல் குறித்து விரிவாக பேசினர்.

News December 10, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி அவர்கள் தலைமையில், இன்று (டிச.10) கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட தொடக்க விழா குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதி வாய்ந்தவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட இருக்கிறது.

News December 10, 2025

நாமக்கல்: பிரசித்தி பெற்ற நிகழ்வின் முக்கிய தகவல்!

image

நாமக்கல் பிரசித்தி பெற்ற, அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்
ஆஞ்சநேயர் ஜெயந்தி பெருவிழாவான வருகிற (19.12.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 05 மணி முதல் 10 மணி வரை 1,00,008 வடைமாலை அலங்காரமும், காலை 11.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் செய்து, மதியம் 1.00 மணிக்கு தங்க கவச அலங்காரம் பூட்டப்பட்டு பூஜை நடைபெறும்
என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

error: Content is protected !!