News November 13, 2025

தங்கம் விலை ஒரேநாளில் தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மட்டும் ₹2,400 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, காலையில் சவரனுக்கு ₹1,600 அதிகரித்த நிலையில், மதியம் மேலும் ₹800 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,900-க்கும், 1 சவரன் ₹95,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 11, 2025

ரூமி பொன்மொழிகள்

image

*வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *உங்கள் இதயத்திற்கு வழி தெரியும். அந்தத் திசையில் ஓடுங்கள். *வாழ்க்கையின் நோக்கம் அன்பாக மாறும் போது அனைத்து சந்தேகங்கள், விரக்தி மற்றும் அச்சம் போன்றவை முக்கியமற்றதாகிவிடும். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.

News December 11, 2025

நீதிபதி சுவாமிநாதனுக்கு Z பாதுகாப்பு வழங்குக: கஸ்தூரி

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதனை, தேசவிரோத சக்திகள் சமூக வலைதளங்களில் மிரட்டுவதாக கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் அவருக்கு மத்திய அரசு Z பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் உள்ள இந்து, முஸ்லிம்களே ஒன்றும் சொல்லாத நிலையில், அரசியலுக்கு திமுக அரசு சர்ச்சையை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

News December 11, 2025

தீயில் உடல் கருகும் போது தாய்லாந்துக்கு டிக்கெட்

image

<<18509384>>கோவா இரவு விடுதியில்<<>> 25 பேர் உடல் கருகி பலியாகிக் கொண்டிருந்த சமயத்தில், விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு விமான டிக்கெட் புக் செய்தது தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிய நள்ளிரவு 1:17 மணிக்கு டிக்கெட் புக் செய்து, அதிகாலை 5:30 மணிக்கு தாய்லாந்து தப்பி ஓடியுள்ளனர். அதேபோல், அவர்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகளும் வீட்டு வேலைக்காரருடையது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!