News November 14, 2025
தங்கம் விலை உயர்வு.. ஊரை காலி செய்யும் தொழிலாளர்கள்

தங்கம் விலை உயர்வால், மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் புகழ் பெற்ற கோவையில் மட்டும், போதுமான பணி ஆணைகள் கிடைக்காமல், பிற மாவட்டங்களை சேர்ந்த 10,000 பொற்கொல்லர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுப நிகழ்வுகளுக்காக நகை வாங்குபவர்களால் மட்டும் ஓரளவு வியாபாரம் நடப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 12, 2025
தேர்தல் பணிகளை ஆலோசிக்க தமிழகம் வரும் அமித்ஷா

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தமாகாவை தவிர வேறு கட்சிகள் இதுவரை இணையவில்லை. இதனிடையே நேற்று EPS-ஐ சந்தித்து ஆலோசனை நடத்திய நயினார் நாகேந்திரன், கள நிலவரத்தை தலைமையிடம் விளக்க நாளை டெல்லி செல்கிறார். இந்நிலையில் வரும் 15-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். அப்போது கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
News December 12, 2025
ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்!

மும்பை தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. இதில், சென்செக்ஸ் 352 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 85,170 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 109 புள்ளிகள் உயர்ந்து, 26,007-ஐ எட்டியுள்ளது. உலகளாவிய சந்தைகளின் வலுவான ஆதரவு காரணமாக ஏற்றம் காணப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உலோக பங்குகளே அதிகம் லாபம் ஈட்டி, சந்தைக்கு ஊக்கமளித்துள்ளன.
News December 12, 2025
காதல் திருமண மோதல் வழக்கில் அதிரடி கைது!

மதம் மாறி திருமணம் செய்த இளைஞரின் குடும்பத்தினர் 4 பேரை சரமாரியாக வெட்டிய பெங்களூரு கும்பலில் 9 பேரை TN போலீசார் கைது செய்தனர். பெங்களூரு நாகவராவை சேர்ந்த ராகுல் டேனியல், அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனாவை காதலித்து வந்தார். வேளாங்கண்ணியில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் உறவினர்கள், டேனியல், அவரது அம்மா உள்ளிட்ட 4 பேரை வெட்டிவிட்டு கீர்த்தனாவை பெங்களூருவுக்கு கடத்தி சென்றனர்.


