News May 2, 2024

தக்கலை பகுதியில் நாளை மின்தடை!

image

குமரி மாவட்டம் தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில், வெள்ளிச்சந்தை மின்விநியோக பிரிவிற்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை பீடர் உயர்அழுத்த மின் பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நாளை(மே 3) நடைபெறுகிறது. இதனால் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநயினார் குறிச்சி, மூங்கில்விளை, கல்படி, காருபாறை, ஞாறோடு, மணவிளை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தகவல்.

Similar News

News December 14, 2025

குமரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

குமரி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 14, 2025

குமரியில் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

தக்கலை ஆசான்கிணறு பகுதி ஜெயவேல் – மல்லிகா தம்பதியின் மூத்தமகள் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் +2 படித்து வந்தார். பத்மநாபபுரம் அரண்மனை பகுதியில் கடை நடத்தி வரும் மல்லிகா, நேற்று மதியம் மகளுக்கு போன் செய்த போது அவர் போனை எடுக்காததால் சந்தேகத்துடன் வீட்டுக்கு வந்த போது வீடு திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மகள் மின் விசிறியில் தூக்கில் இறந்த நிலையில் காணப்பட்டார். தக்கலை போலீசார் விசாரணை.

News December 14, 2025

குமரி மாவட்ட அளவிலான அஞ்சலக குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 24.12.2025 அன்று 10.30 மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் குறைகள் இருப்பின் அதனை இக்கூட்டத்தில் நேரில் தெரிவிக்கலாம் (அல்லது) தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!