News October 13, 2025
தக்கலையில் 24 வாகனங்கள் பறிமுதல்

தக்கலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போலீசார் தக்கலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் ஓட்டி வந்த பதினெட்டு சக்கரங்களை கொண்ட இரண்டு லாரிகள், டெம்போ-02, கார்கள்-8, ஆட்டோ-01 மற்றும் இருசக்கர வாகனங்கள்-11 என மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
Similar News
News December 7, 2025
குமரி: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்!

குமரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் குமரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04652-275089 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News December 7, 2025
குமரி: ரயில் பயணிகள் கவனத்திற்கு… சிறப்பு ரயில்

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாளை பகல் 11.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாளை (டிச.8) தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிச.9 அதிகாலை 4:15 மணிக்கு நாகர்கோவில்வரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
News December 7, 2025
குமரியில் அடிக்கடி மின்தடையா? கவலை வேண்டாம்..!

குமரி மக்களே.. மழை உள்ளிட்ட பல்வேறு சமயங்களில் நமது பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இனி இது போன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனே 9498794987 என்ற எண்ணுக்கு கால்செய்து உங்கள் ஏரியாவில் எங்கு மின்தடை என தெரியப்படுத்துங்க. உடனே மின்சாரத் துறை அதிகாரிகள் வந்து மின்தடையை சரிசெய்து சீரான மின் சேவை கிடைக்க செய்வார்கள். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.


