News November 13, 2025
டெல்லி சம்பவம்: ₹26 லட்சம் நிதி திரட்டிய டாக்டர்ஸ்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில், அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடைய 4 டாக்டர்கள், வெடிபொருள் தயாரிப்பிற்காக ₹26 லட்சம் நிதி திரட்டி, டாக்டர் உமரிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
மதுரை: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

மதுரை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 14, 2025
புதிய கட்சியை தொடங்கினார் மார்ட்டின் மகன்

புதுச்சேரியில் தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ (LJK) என்ற புதிய கட்சியை தொடங்கினார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்., பாஜக, காங்., திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்க, அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இவரின் அரசியல் வருகையால், திமுகவும் ஜெகத்ரட்சகனை புதுச்சேரி முதல்வராக களமிறக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
News December 14, 2025
CSK குறிவைக்கும் முக்கிய வீரர்கள்!

2025 IPL-ல் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், இம்முறை ஏலத்தில் சூப்பர் ஃபார்மில் இருக்கும் வீரர்களை வாங்க CSK முனைகிறது. ₹43 கோடி வைத்துள்ள CSK-வின் பிரதான டார்கெட் கேமரூன் கிரீன் அல்லது லியம் லிவிங்ஸ்டனாக இருக்கக்கூடும். டெத் பவுலிங்கிற்காக மதீஷா பதிரானாவை மீண்டும் குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கும். ஜடேஜாவின் இடத்தை நிரப்பிட உள்ளூர் லீக்கில் கலக்கும் பிரசாந்த் வீரை வாங்க CSK குறிவைத்துள்ளது.


