News March 22, 2024
டிரைவர் ஷர்மிளாவுக்கு முன்ஜாமீன்

கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் சர்மிளாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. பெண் காவலர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறாக பரப்பி வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் சர்மிளா மீது மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ஓட்டுனர் சர்மிளாவிற்கு நீதிமன்றம் இன்ற முன் ஜாமீன் வழங்கியது.
Similar News
News November 15, 2025
கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா, சூலூர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, அன்னூர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 15, 2025
கோவை அருகே அதிரடி கைது!

சூலூரைச் சேர்ந்த பிரியா என்பவர் நேற்று முந்தினம் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்துச் சூலூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராகவன் (24) மற்றும் ஜெகதீஸ் (31) ஆகிய இருவரையும் நேற்று (நவ. 14) கைது செய்தனர்.
News November 15, 2025
கோவையில் மீண்டும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’. நிகழ்ச்சி

கோவை மாநகரில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ளது. அதன்படி, வரும் (நவம்பர்.16) ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் தின சிறப்பு ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


