News November 13, 2025

டிகிரி போதும் சென்னையில் சூப்பர் வேலை- APPLY HERE!

image

சென்னையில் Mahindra Finance நிறுவனத்தில் Sales Executive பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். அனுபவத்தின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்டும். விருப்பமுள்ள ஆண்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் டிசம்பர்.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் வேலை தேடுவோருக்கு சூப்பரான வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க. உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 5, 2025

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு

image

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் & பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), தமிழக அரசு உதவியுடன் நடத்தி வருகிறது. அதன்படி, புத்தகக் காட்சி வரும் ஜன.7-ஜன.19 வரை 12 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த முறை 900 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 5, 2025

சென்னை: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

image

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணி நடப்பதால், டிசம்பர் 5 முதல் 15 வரை, உழவன், அனந்தபுரி, சேது மற்றும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாம்பரத்தில் பயணத்தை முடிக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கத்தில் இதே ரயில்கள் தாம்பரத்தில் இருந்தும், மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் (22158) சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News December 5, 2025

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு!

image

சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் குறைந்த நிலையில், 2 ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!