News November 15, 2025
டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கு தேர்வு

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கான தேர்வு வருகிற 16ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைவாணர் என்.எஸ்.கே இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் சேவியர் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வுக் கூடங்களில் நடைபெறுகிறது. 310 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.
Similar News
News December 7, 2025
குமரி: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறி அவர்களிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த பினு என்பவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 7, 2025
குமரியில் கஞ்சா வழக்கில் 465 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று தெரிவித்தனர். கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
News December 7, 2025
குமரி: அரசு வேலை.. ரூ.23 லட்சம் மோசடி! தாய் மகன் மீது வழக்கு

நாகர்கோவிலை சேர்ந்த ஜீவா நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், தனக்கும் சிலருக்கும் கீதா மற்றும் அவரது மகன் ஆகியோர் சேர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நீதிமன்றம் உத்தரவின் பேரில் வடசேரி போலீசார் 2 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.


