News August 23, 2025
ஜெயங்கொண்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சியில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் (23.8.2025) சனிக்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, விளந்தையில் நடைபெற உள்ளது. ஆகவே அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த முகாம்களில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது.
Similar News
News January 12, 2026
அரியலூரில் உள்ள மிகப்பெரிய யானை சுதை சிற்பம்!

அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
News January 12, 2026
அரியலூர்: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <
News January 12, 2026
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


