News November 25, 2025

சோளிங்கர் வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு!

image

ராணிப்பேட்டை: சோளிங்கரில் உள்ள SBI வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு செய்த வாலாஜாவைச் சேர்த்த குரு ராகவன்(28) என்பவர் கைது செய்யப்பட்டார். வங்கியில் அசோசியேட் பிறருக்காக பணிபுரிந்து வந்த குரு ராகவன் கடந்த ஒன்றை ஆண்டுகளாக வங்கி பராமரிப்பு செலவினை, நிதி உட்பட பல்வேறு முறைகேடு ஈடுபட்டுள்ளதை கண்டறிந்து கிளை மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 24, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, இன்று இரவு முதல் நாளை காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!

News January 23, 2026

ஆற்காடு வட்டத்தில் அறிவியல் கண்காட்சி தொடக்கம்

image

இராணிப்பேட்டை இன்று (ஜன.23) பள்ளிக் கல்வித் துறை சார்பில் “செழிப்பான தொகுதி வளர்ச்சி திட்டம்” கீழ் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தார். ஆற்காடு வட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி சிறப்பித்தனர்.

News January 23, 2026

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஜன.23 ஆம் தேதி தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!