News April 3, 2025
சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

தஞ்சை மாநகராட்சி 2025-26 நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல்.30ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5% ஊக்கத்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வரியை வரி வசூல் மையம் மூலமாகவோ அல்லது கியூ.ஆர் கோடு, யூபிஐ, கூகுள் பே போன்ற செயலிகள் மூலமாகவோ செலுத்தலாம் என தஞ்சை மாநகராட்சி அறிவித்துள்ளது.(SHARE பண்ணுங்க)
Similar News
News January 18, 2026
தஞ்சை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘572’ அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10=ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.24,250 – ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 18, 2026
தஞ்சாவூர்: கூட்டு பட்டா, பட்டாவில் சிக்கலா?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அலுவலர்கள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.
News January 18, 2026
தஞ்சாவூர்: ரயில் மோதி முதியவர் பலி

தஞ்சாவூர் அருகே நேற்று முன்தினம் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமார் 70 வயதுடைய முதியவர், திருச்சி – காரைக்கால் சரக்கு ரயில் மோதி பலியானார். அவரது அடையாளம் மற்றும் சொந்த ஊர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில், தஞ்சாவூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


