News August 23, 2025
சேலம்: 1,823 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி!

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற ஆகஸ்ட் 27- ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,823 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் மாநகர் பகுதிகளில் மட்டும் 865 இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 23, 2026
சேலம், ஈரோடு வழியாக இமயமலைக்கு ரயில்

நாகர்கோவில் முதல் இமயமலை அடிவாரமான நியூ ஜல்பைகுரி வரை இயக்கப்படும் ‘அமிர்த பாரத்’ அதிவிரைவு ரயிலின் வழக்கமான சேவை வரும் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ரயில் ஞாயிறு இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு மதுரை, கோவை, ஈரோடு, சேலம் வழியாக புதன் அதிகாலை 5:00 மணிக்கு இலக்கை அடையும். வியாழன் காலை 2:20-க்கு ஈரோடு மற்றும் 3:23க்கு சேலம் வழியாக மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News January 22, 2026
ஜான்சன் பேட்டை கொலை குற்றவாளிகள் மீது குண்டாஸ்

சேலம் ஜான்சன் பேட்டையில் கடந்த 2023-ல் நடந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக, கடந்த 11.1.2026 அன்று சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் மற்றும் பிரசன்னா ஆகியோர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகக் கூறி, இவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News January 22, 2026
சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை!

சேலத்தில் நாளை(ஜன.23) மின் பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை சிங்கிபுரம்,வாழப்பாடி, துக்கியாம்பாளையம்,அத்தனுார்பட்டி,பேளூர், தாரமங்கலம் ,தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திக்காட்டானுார்,வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம்,பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், அரியானுார், சீரகாபாடி, சன்னியாசிப்பட்டி, ஜலகண்டாபுரம், ஆடையூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை


