News August 4, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள 200 ஏரிகளில் தற்போது வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஏரிகளில் அதிகமான ஆழத்தில் மண் எடுப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகாரிகள் சொல்லும் ஆழத்தில் தான் மண் எடுக்க வேண்டும் என்றும், அதிகமாக எடுத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 15, 2026

வாழப்பாடியில் பயங்கர விபத்து: டிரைவர் கைது!

image

வாழப்பாடி அருகே கருமாபுரம் பத்தாங்கல் மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, அவ்வழியே வந்த சரக்கு வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் சின்ன பிள்ளை (60) மற்றும் அவரது மருமகள் காயத்ரி (35) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் விபத்து ஏற்படுத்திய பேளூரை சேர்ந்த சபரி(33) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்

News January 15, 2026

CRIME TIME: தகாத உறவால் அரங்கேறிய பகீர் சம்பவம்!

image

ஓமலூர் எஸ்.ஐ பூபதிக்கும், பூசாரிப்பட்டியைச் சேர்ந்த அலமேலு என்ற பெண்ணுக்கும் இடையே முறையற்ற பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், பூபதியை வீட்டிற்கு வரவழைத்த அலமேலு 4 பேருடன் சேர்ந்து பூபதியை தாக்கியுள்ளார். பின்னர் அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மற்றும் 4 சவரன் நகையைப் பறித்துக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், முறையற்ற உறவு வைத்திருந்த பெண் உட்பட 5 பேரையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

News January 15, 2026

சேலம்: இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் (14.01.2026) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

error: Content is protected !!