News September 28, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (28.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

Similar News

News November 8, 2025

சேலம் கோட்டத்தில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள்!

image

சேலம் மாவட்டத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் நேற்று முதல் வருகிற 10-ம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.

News November 8, 2025

இளம்பிள்ளையில் சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்!

image

சேலம் இளம்பிள்ளை அருகே, காந்திநகர் பகுதியில் வசித்து வந்த பெரியண்ணன் (80) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (70) இருவரும் மகனுடன் வசித்து வந்தனர். வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நேற்று முன்தினம் மாலை பாக்கியம் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், மனைவியை இழந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் பெரியண்ணனும் உயிரிழந்தார்.

News November 8, 2025

சேலம் இரட்டை கொலையில் மேலும் ஒருவர் கைது!

image

சேலம்: இளம்பிள்ளை அருகே 2 மூதாட்டிகள் நகைக்காக கொலை செய்யப்பட்டு, உடல் குட்டையில் வீசப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அய்யனாரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அவரை விசாரித்ததில், தூதனூர் பகுதியை சேர்ந்த பூபதி என்பவரும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மூதாட்டிகளின் உடல்களை குட்டையில் வீச பூபதி உதவியுள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் பூபதியை அதிரடியாக கைது செய்தனர்.

error: Content is protected !!