News September 30, 2025
சேலம் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்!

சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்ததாவது: ’ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீடுகள், வணிக நிறுவனங்களில் அதிகரிக்கும் குப்பைகளை சாலையோரம், காலி மனைகள், நீர்நிலைகளில் கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வணிகர்களிடமிருந்து இரவு நேரங்களில் கழிவுகளை சேகரிக்க தனி வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சாலையோரம் குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் கூறினார்.
Similar News
News December 6, 2025
தலைவாசல் அருகே மின்சாரம் தாக்கி நடந்த சம்பவம்!

கெங்கவல்லி தாலுகா ஆணியம்பட்டி புதூரைச் சேர்ந்த தொழிலாளி விஸ்வநாதன் (39) நேற்று தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே கட்டுமானப் பணியில் இருந்தபோது, மேலே சென்ற மின்கம்பி அவரது கையில் தொடுவதால் மின்சாரம் தாக்கி கீழே வீழ்ந்து கடுமையாக காயமடைந்தார். ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 6, 2025
சேலத்தில் மேள தொழிலாளி கொலை!

அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்த் (23).மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவரை கடந்த 1ல், இரவு 6 பேர் கொண்ட கும்பல் போதையில் தாக்கி தலையில் கல்லைத்தூக்கி போட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயகாந்த் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே சிறுவன் உள்ளிட்ட 5 பேரை காரிப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.
News December 6, 2025
சேலம்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


