News August 23, 2025
சேலம்: மகளிர் உரிமைத்தொகை கேட்டு 75,830 விண்ணப்பம்!

கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆக.21- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் 65,658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கலைஞர் உரிமைத்தொகைக் கேட்டு மட்டும் சுமார் 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
FLASH: சேலம் மேட்டூர் வழியாக செல்ல தடை!

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததையடுத்து, பாதுகாப்பு கருதி மேட்டூர்-மாதேஸ்வரன் மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடைபயணத்திற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் பேருந்து அல்லது கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News January 23, 2026
சேலத்தில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News January 23, 2026
சேலம்: மனைவியை ஸ்க்ரூ டிரைவரால் குத்திய கணவன் கைது

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மி பி என்பவர் தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து நகர காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்ட போது அவரது கணவர் சதார் ஷெரீப் மது போதையில் தன்னை ஸ்க்ரூ டிரைவரால் மண்டையில் குத்தி காயப்படுத்தியதாக தெரிவித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் ஷெரீபை கைது செய்தனர்.


