News August 19, 2024
சேலம்: ஜெயலலிதா கார் ஓட்டுநரின் சகோதரர் கைது

தாரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் நேற்று மாலை தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் அந்த வழியாக வந்துள்ளார். அவர் எஸ்ஐ அழகு துரையிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனபாலை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 21, 2026
சேலம்: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே <
News January 21, 2026
சேலம்: பெண்களே சூப்பர் வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. 12 முதல் 20 நபர்கள் கொண்ட குழுக்கள் விண்ணப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படும். இந்த ஆண்டு ₹363 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மகளிர் குழுவினர் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News January 21, 2026
சேலம்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


