News March 24, 2024
சேலம்: சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம்
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகையில்
உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கோவிலில் சுவாமியை வணங்கி அங்குள்ள பொது மக்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பெரியசோரகை ஊர் பொதுமக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Similar News
News November 11, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.11) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 11, 2025
சேலம்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
சங்ககிரி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்!

சங்ககிரி: புல்லாகவுண்டம்பட்டி ராமகூடல் ஓடையில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டனர்.சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை, இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


