News October 19, 2025
சேலம் சினிமா தியேட்டரில் வாலிபர் பலி!

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டெல்பின் டோனி (24) என்பவர் நேற்று இரவு நண்பர்களுடன் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கிற்கு சினிமா பார்க்கச் சென்றார். படிக்கட்டில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை!
Similar News
News December 5, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச.04) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரம் வெளியிடப்பட்டது.

சேலம் வழியாக செல்லும் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் சாம்பல்பூர்-ஈரோடு-சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (08311/08312] சேவையை வரும் டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.