News April 3, 2025
சேலம்: கொலை வழக்கில் 7 பேர் கைது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பங்காளியூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 30ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 7 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மனைவி, மகனை தேடி வருகின்றனர்.
Similar News
News January 18, 2026
சேலம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 18, 2026
சேலம்: பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News January 18, 2026
BREAKING: சேலம் மேச்சேரியில் மாடு முட்டி விவசாயி பலி!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே புக்கம்பட்டி எருதாட்டத்தை வேடிக்கை பார்த்த விவசாயி ராஜ்குமார் (57) மாடு முட்டி உயிரிழந்தார். முன்னதாக நேற்று ஆத்தூர் தம்மம்பட்டியில் மாடு பாய்ந்ததில் செந்தாரப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் கொண்டைமல்லி பகுதியைச் சேர்ந்த வினிதா ஆகிய இருவர் உயிரிழந்தனர். 2 நாளில் சேலம் மாவட்டத்தில் மாடு முட்டி 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


