News November 14, 2025
சேலம்: கொரியர் நிறுவன ஊழியர் தற்கொலை!

சேலம் அடுத்த உத்தமசோழபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (27) வயதான இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அவர் ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 14, 2025
சேலம்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையதளங்களில் “அதிக லாபம் கிடைக்கும் தொழில்கள்” அல்லது “பரிசு சீட்டுகள்” போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வந்தால் ஏமாற வேண்டாம் எனவும், சந்தேகம் ஏற்பட்டால் 1930 என்ற புகார் எண்ணை அழைத்து உடனடியாக புகார் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
News December 14, 2025
சேலம் மத்திய சிறையில் இரண்டு செல்போன் பறிமுதல்!

சேலம் மத்திய சிறையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை சோதனை குழுவினர் சோதனை மேற்கொண்டனர். தண்டனை கைதியின் அறையில், இரண்டு செல்போன் பேட்டரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு யார் செல்போன் கொடுத்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறையில் பெரும் பரபரப்பு நிலை வருகிறது.
News December 14, 2025
சேலத்தை சேர்ந்த மாணவர்கள் கால்பந்து போட்டியில் வெற்றி!

திண்டுக்கல்லில் ஜிடிஎன் கல்லூரியில் இன்று நடைபெற்ற அம்பேத்கர் யுனிவர்சிட்டி சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், சேலம் மத்திய சட்டக் கல்லூரி அணி இறுதி போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்றனர். பட்டத்தை வென்ற சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு அந்தக் கல்லூரி பேராசிரியர்கள் கோப்பையை வழங்கி பாராட்டினர். இவர்களுடன் உடற்கல்வி இயக்குனர் வெங்கடேஷ் உள்ளார்.


