News August 19, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரிய சமுதாய அமைப்பாளர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: பணியிடத்திற்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, வருகிற (ஆக.30) மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

Similar News

News January 14, 2026

CRIME TIME: ஏற்காட்டில் முறையற்ற உறவால் நடந்த விபரீதம்!

image

ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதியில் சாலா(33) என்ற பெண் அரை நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த வழக்கில் இளம்பிள்ளையை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் முறையற்ற உறவில் இருவரும் இருந்து வந்த நிலையில் பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.இந்தநிலையில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

வாழப்பாடி அருகே பயங்கர விபத்து: 2 பெண்கள் பலி!

image

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் பத்தாங்கல் மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று மதியம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, அவ்வழியே வந்த சரக்கு வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் சின்ன பிள்ளை (60) மற்றும் அவரது மருமகள் காயத்ரி (35) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

ஜனவரி.16-ல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

image

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டுமென ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட எந்தவித இறைச்சி கடைகளும் திறக்க கூடாது என்றும், மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!