News October 11, 2025
சேலம்: கனரா வங்கி வேலை – நாளை கடைசி நாள்!

கனரா வங்கியில் அப்ரண்டிஸ் பயிற்சி வேலை!
மொத்த பணியிடங்கள்: 394 (தமிழ்நாடு)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.15,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: 12.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
Similar News
News December 13, 2025
சேலம் மாநகராட்சியில் பராமரிப்பதில் முறைகேடு!

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சுமார் 360 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இக்குப்பைகள் 217 துப்புரவு வாகனங்கள் மூலம் குப்பை மேட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் வாகனங்களை முறையாக தணிக்கை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் உதிரி பாகங்கள் மாற்றுவதில் மோசடி நடைபெறுவதாகவும், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
சேலம் மாவட்டத்தில் இரட்டை பதிவு வாக்காளர்கள் சரிபார்ப்பு

எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகள் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. வரும் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் இரட்டை பதிவு வாக்காளர்கள் உள்ளிட்ட குறைபாடுகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கண்டறிந்து, அந்தந்த பாகங்களின் உத்தேச பட்டியல்கள் நிராகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.
News December 13, 2025
சேலத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை!

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி இன்று வெளியிட்டுள்ள செய்தியில்: நாளை டிச.14ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்து, தர்மபுரி மாவட்டத்திற்கு சாலை வழியாக செல்லும் நிலையில், அந்த நாளில் சேலம் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


