News December 10, 2025

சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News January 25, 2026

சேலம்: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News January 25, 2026

சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

சேலம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

News January 25, 2026

ஆத்தூர்: திமுகவில் இணைந்தார்.. அதிர்ச்சியில் அதிமுக

image

ஆத்தூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாதேஸ்வரன், இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன், கடந்த 2011 – 2016 காலகட்டத்தில் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ, திமுகவில் இணைந்தது சேலம் அதிமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!