News November 13, 2025
சேலம்: ஆதிதிராவிடர் பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கிகரிக்கப்பட நிறுவனம் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த தாட்கோ மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 23 வயதிற்குட்பட்டவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது கல்லூரி தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com பதிவு பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
சேலத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை!

சேலத்தில் மின் பராமரிப்பு நடைபெறுகின்றது. இதன் காரணமாக நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு,தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி,கொண்டலாம்பட்டி,நெய்க்காரப்பட்டி,உத்தமசோழபுரம்,பூலாவரி,கரட்டூர், சூரமங்கலம்,மெய்யனுார், சின்னேரிவயல்,பள்ளப்பட்டி,சாமிநாதபுரம் பகுதிகளில் நாளை(டிச.15) காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
News December 14, 2025
சேலம்:திருமணம் ஆகாத ஏக்கத்தில் சோகமான முடிவு!

சேலம்: இந்திரா நகர் மேச்சேரி பிரிவு ரோட்டைச் சேர்ந்த பழ வியாபாரி லட்சுமண பெருமாள் (30), திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று தனது பழக்கடை குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 14, 2025
இன்று சேலம் வருகிறார் CM ஸ்டாலின்!

தர்மபுரியில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அயோத்தியாபட்டணம் வழியாக பாப்பிரெட்டிப்பட்டி செல்கிறார். இதனை முன்னிட்டு சேலம் மாவட்டத் தில் இன்று (14ம்தேதி) டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட க கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.


