News August 20, 2024

சேலத்தை அதிரவிட்ட மூவர்

image

தேவகோட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணியனை தொடர்பு கொண்ட கும்பல், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் செம்பு கிடைத்திருப்பதாகவும். அதனை விற்று தந்தால் பல லட்ச ரூபாய் கமிஷனாக தருவதாகவும் கூறியுள்ளனர். சேலம் சத்தியமங்கலம் வரவழைத்து 10,000 முன்பணம் பெற்று, போலி இரிடியம் செம்பை கொடுத்துள்ளனர். மோசடி கும்பலை தேடி வந்த போலீசார், சுந்தர பாண்டி, செம்புலிபிரபு ஜீனத் குமார் மூவரை கைது செய்தனர்.

Similar News

News January 17, 2026

ஆத்தூர் கூலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு திருவிழா!

image

ஆத்தூர்: கூலமேடு ஊராட்சியில் நாளை பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் 600 காளைகளும், 500 வீரர்களும் பங்கேற்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அரசின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, எவ்வித அசம்பாவிதமுமின்றி போட்டியை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News January 17, 2026

சேலத்தில் வரும் 31ம் தேதி வரை கெடுபிடி!

image

சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாநகரத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும். ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுகூட்டம், நடத்துவதற்கு பிரிவு 41, 1988 படி, மாநகர காவல் ஆணையரிடம் 5நாள் முன் அனுமதி பெற வேண்டும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (ஜன.16) இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!