News October 20, 2025
சேலத்தில் 75 ஆண்டுகளாகப் பட்டாசு வெடிக்காத கிராமம்!

சேலம்:ஓமலூர் அருகே உள்ள வெளவால்தோப்பு கிராமத்திலும் பட்டாசு வெடிப்பதில்லை. அங்குள்ள ஆலமரத்தில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் தொடர்ந்து 75 ஆண்டுகளாகத் தங்கி வருகின்றன. இதனாலேயே அந்தக் கிராமத்துக்கு வெளவால்தோப்பு என்று பெயர் சூட்டப்பட்டது. அங்குள்ள மக்களில் சிலர் வெளவால்களைத் தெய்வமாகவும் வழிபடுகின்றனர்.வெளவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க அக்கிராம மக்கள் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கின்றனர்.
Similar News
News December 15, 2025
சேலம் இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாவட்டம் ஊரகப் பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் எதேனும் அவசர உதவி தேவைபட்டால் 100 என்ற எண்ணுக்கு அழைக்கவும். அல்லது புகைப்படத்தில் குறிப்பிடபட்டுள்ள உங்கள் காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.
News December 15, 2025
சேலம் கொளத்தூரில் வெட்டி கொலை? பரபரப்பு

சேலம்: கொளத்தூர் அருகே உள்ள காவேரிபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு ரத்த காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போன நபர் கொளத்தூர் அருகே கருங்கலூர் பகுதியை சேர்ந்த முன்னால் ஐ.டி.ஊழியர் செல்வகுமார்(38) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடத்தினர் வருகின்றனர்.
News December 15, 2025
சேலம்: டிகிரி, டிப்ளமோ போதும்…அரசு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள்<


