News November 19, 2025
சேலத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் மனு!

தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 432 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் மகளிர் உரிமை தொகை வழங்க கோரி 1 லட்சத்து 46 ஆயிரத்து 986 பெண்கள் மனு வழங்கினர்.பிற கோரிக்கைகளை வலியுறுத்தி 1 லட்சத்து 36 ஆயிரத்து 25 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 92 ஆயிரம் அணுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
வாழப்பாடி அருகே சிறுமியை சீரழித்த நபர் கைது

பெத்தநாயக்கன்பாளையம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வாழப்பாடி மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் துன்புறுத்திய கட்டுமான பணியாளர் மணி என்பவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று அவரைக் கைது செய்தனர்.

சேலம்: ஒரே ஆண்டில் 377 போ் பலி!

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சேலம், தருமபுரி, ஓசூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் எல்லைகளில் மொத்தம் 377 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தைக் கடப்பது மற்றும் கவனக்குறைவே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.