News April 2, 2025
சேலத்தில் வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,870.50 ஆக நிர்ணயம்!

நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூபாய் 43.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 1,870.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 16, 2026
சேலம் – கந்தம்பட்டி மேம்பாலத்தில் பயங்கரம்!

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 16, 2026
சேலம்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<
News January 16, 2026
சேலம் ரயிலில் ஆபத்தா? கவலை வேண்டாம்!

சேலம் ரயில்வே போலீசார் பயணிகளின் பாதுகாப்பிற்காக 94981-01963 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளனர். இந்த எண்ணில் பயணிகள் தங்களின் புகார்களை எளிதாகப் பதிவு செய்யலாம். மேலும், “நகைகளுடன் உறங்க வேண்டாம், அறிமுகமில்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம்” என எச்சரித்துள்ளனர். அவசர உதவிக்கு 139, 1512 அல்லது 99625-00500 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.


