News June 18, 2024

சேலத்தில் ஜமாபந்தி முகாம் – ஆட்சியர் உத்தரவு

image

சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று (ஜூன் 18) ஜமாபந்தி முகாம் தொடங்கியுள்ளது. அதன்படி, அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News January 16, 2026

சேலம் – கந்தம்பட்டி மேம்பாலத்தில் பயங்கரம்!

image

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 16, 2026

சேலம்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<> இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு(0427-2418735) அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

சேலம் ரயிலில் ஆபத்தா? கவலை வேண்டாம்!

image

சேலம் ரயில்வே போலீசார் பயணிகளின் பாதுகாப்பிற்காக 94981-01963 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளனர். இந்த எண்ணில் பயணிகள் தங்களின் புகார்களை எளிதாகப் பதிவு செய்யலாம். மேலும், “நகைகளுடன் உறங்க வேண்டாம், அறிமுகமில்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம்” என எச்சரித்துள்ளனர். அவசர உதவிக்கு 139, 1512 அல்லது 99625-00500 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!