News August 4, 2024
சேலத்தில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு

சேலம் மாவட்டத்தில் ஆடி திருவிழாவையொட்டி குற்ற சம்பவங்களை தடுக்க கோவில்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மக்களோடு மக்களாக சேர்ந்து சிலர் திருட்டில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதால், திருவிழா முடியும் வரை போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News January 16, 2026
வேண்டியதை அருளும் சேலம் கோட்டை மாரியம்மன்!

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வீற்றிருக்கும் கோட்டை மாரியம்மன், நகரின் எட்டு மாரியம்மன்களில் மிகவும் பெரியவளாகவும், சக்தி வாய்ந்தவளாகவும் போற்றப்படுகிறாள். இங்கு வந்து அம்மனை வேண்டினால் அம்மை நோய், உடல் குறைபாடுகள் நீங்குவதோடு, குழந்தை வரம் மற்றும் தீராத நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. இந்த ஆன்மீகத் தகவலை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 16, 2026
சேலம் – கந்தம்பட்டி மேம்பாலத்தில் பயங்கரம்!

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 16, 2026
சேலம்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<


