News October 9, 2024
செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது

காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே கரும்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (28). இவர் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி அருகே ஆவின் டீ கடை நடத்தி வருகிறார். இங்கு டீ குடித்த 5 பேர், கடையில் வேலை செய்து வரும் ஜிதேந்தர் மண்டல் என்பவருடைய செல்போனை நேற்று அதிகாலை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
Similar News
News November 10, 2025
காஞ்சியில் இன்றே கடைசி-2,708 காலியிடங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: <
News November 10, 2025
காஞ்சியில் 635 பேர் ஆப்சென்ட்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வு மையம் சார்பில், மொத்தம் 3 தேர்வு மையங்களில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நேற்று (நவ.9) நடைபெற்றது. இந்த மூன்று மையங்களிலும் மொத்தம் 4,683 பேர் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இதில், 4,048 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்ததாகவும், 635 பேர் ஆப்சென்ட் ஆனதாகவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
News November 10, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (நவம்பர். 09) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


